/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சோழ நாட்டிற்கு சென்ற பாண்டிய நாடு சீர்வரிசை
/
சோழ நாட்டிற்கு சென்ற பாண்டிய நாடு சீர்வரிசை
ADDED : ஜூன் 07, 2024 07:25 PM
மதுரை:மதுரை சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட திருமண சீர் வரிசை மரப்பொருட்கள் தஞ்சாவூருக்கு அனுப்பப்பட்டன.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சிவில் இன்ஜினியர் செந்தில்குமார். மகள் திருமணத்திற்காக ஜவுளிகள் வாங்க கடந்த வாரம் குடும்பத்துடன் மதுரை வந்தார். மத்திய சிறை கேண்டீனில் சாப்பிட்ட போது கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனைக்கு இருப்பதை கண்டு விசாரித்தார். மகள் திருமணத்திற்காக தேக்கு மரக்கட்டில், பீரோ உட்பட 12 வகையான மரப்பொருட்கள் தயாரித்து கொடுக்க அங்காடி பொறுப்பாளர் பழனியிடம் அட்வான்ஸ் கொடுத்தார்.
கைதிகள் ஒருவாரத்தில் கலைநயத்துடன்கூடிய மரப்பொருட்களை தயாரித்தனர். நேற்று செந்தில்குமார் குடும்பத்தினரிடம் டி.ஐ.ஜி., பழனி, கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ரூ.2.35 லட்சம் மதிப்புள்ள மரப்பொருட்களை வழங்கினர்.