ADDED : ஜூலை 02, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
மேலுார்: கம்பூர் ஊராட்சி பெரியகற்பூரம்பட்டியில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கானோர் விலக்கில் உள்ள பஸ் ஸ்டாப்பில் இருந்து மேலுார், நத்தம், கருங்காலக்குடிக்கு சென்று வருகின்றனர். இந்த பஸ் ஸ்டாப் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பராமரிப்பின்றி சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. கான்கிரீட் கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிகின்றன.
சில நாட்களுக்கு முன் பெய்த மழைக்கு சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதுதொடர்பாக கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிகாரிகள் பார்த்துவிட்டு சென்றதோடு சரி. பஸ் ஸ்டாப் இடிந்து உயிர் பலி ஏற்படும் முன் புதிய பஸ் ஸ்டாப் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
