ADDED : ஜூலை 02, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம், மதுரை இந்திய யோகா சங்கம் தமிழ்நாடு சார்பில் ஒரு வார இலவச மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) முகாம் ஜூலை 6ல் துவங்குகிறது.
தினமும் காலை 6:30 மணி முதல் 7:15 மணி வரை தெப்பக்குளம் கீதா நடன கோபால நாயகி மந்திர், ஆண்டாள்புரம் மடாலயத்தில் நடக்கிறது. பெண்களுக்கு மட்டும் தெப்பக்குளம் டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்சிங் ஹோமில் காலை 10:30 மணி முதல் 11:15 மணி வரை நடக்கிறது. பயிற்சி மூலம் சுவாசக் கோளாறுகள், உடல் வலிகள், மனஅழுத்தம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். முன்பதிவு அவசியம். விபரங்களுக்கு இயக்குநர் கே.பி. கங்காதரனை 88834 21666 ல் தொடர்பு கொள்ளலாம்.
