/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நடக்காத பணிகளை நடந்ததாக கலெக்டரை நம்ப வைத்த பி.டி.ஓ.,
/
நடக்காத பணிகளை நடந்ததாக கலெக்டரை நம்ப வைத்த பி.டி.ஓ.,
நடக்காத பணிகளை நடந்ததாக கலெக்டரை நம்ப வைத்த பி.டி.ஓ.,
நடக்காத பணிகளை நடந்ததாக கலெக்டரை நம்ப வைத்த பி.டி.ஓ.,
ADDED : ஏப் 27, 2024 04:49 AM

கொட்டாம்பட்டி: விரசூடாமணிபட்டியில் செயல்படாத தொட்டிகள் செயல்படுவதாகவும், பள்ளம் தோண்டி புதர்மண்டிய இடத்தில் மேல்நிலை தொட்டி கட்டிவருவதாகவும் கலெக்டருக்கு தவறான தகவல்கொடுத்துள்ளதாக பி.டி.ஓ., மீது புகார் எழுந்துள்ளது.
இக்கிராமத்தில் குடிநீருக்காக ரூ.7.70 லட்சத்தில் நிதி ஒதுக்கப்பட்டு ஓராண்டுக்கு முன் குழி தோண்டியதோடு சரி. இன்று வரை தொட்டி கட்டாமல் ஒன்றிய அலுவலகத்தில் நிதி நிலுவையில் உள்ளது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகவே, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பி.டி.ஓ.(கி.ஊ.,) கார்த்திகேயினியிடம் விளக்கம் கேட்டனர்.
அவர் கலெக்டர் சங்கீதாவிற்கு ஏப்.,22ல் பதில் அனுப்பினார். அதில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை தொட்டிகள், 3 பிளாஸ்டிக் தொட்டிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதாக கூறினார். தவிர 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர்தொட்டி கட்டுமான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். நடக்காத பணியை நடந்ததாக கலெக்டருக்கு பி.டி.ஓ., தகவல் கொடுத்தது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பி.டி.ஓ.,விடம் நாம் கேட்டபோது, பொறியாளரிடம் பேசிவிட்டு தகவல் கூறுவதாக தெரிவித்தார். மீண்டும் அவரை தொடர்பு கொண்ட போது அலைபேசியை எடுக்கவில்லை.

