/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செப்டிக் டேங்க் கழிவை ரோட்டில் கொட்டுறாங்க
/
செப்டிக் டேங்க் கழிவை ரோட்டில் கொட்டுறாங்க
ADDED : ஆக 19, 2024 06:44 AM
அலங்காநல்லுார் : வாடிப்பட்டி அருகே மதுரை -- திண்டுக்கல் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு பகுதி, கண்மாய் கரைகளில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டுவது தொடர்கிறது.
இப்பகுதி கிராமங்கள் பரவை, வாடிப்பட்டி பேரூராட்சி பகுதி வீடுகளில் இருந்து மினி லாரிகளில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொண்டு வந்து அய்யங்கோட்டை, நகரி பகுதி சர்வீஸ் ரோட்டில், மயானம், ஓடை, கண்மாய் கரைகளில் கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் நிலம், நீர் மாசுபடுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது.
இதுபோன்று தினமும் கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை, அவர்கள் தங்கள் பங்காக குப்பையை கொட்டி எரிக்கின்றனர். இதனால் இங்கு மேயும் கால்நடைகள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றன. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

