ADDED : ஏப் 23, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : கீழவளவில் வெள்ளையத்தேவன் மற்றும் மகேஷ் தலைமையில் இரு கோஷ்டிகள் உள்ளன. இதில் மகேஷ் தரப்பை சேர்ந்த நவீன் கீழவளவு பஸ் ஸ்டாப் அருகே ஏப்.,21 இரவு காரில் இருந்தார். அங்கு வந்த வெள்ளையத்தேவன் தரப்பினர் டிபன்பாக்ஸில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை அவர் மீது வீசினர்.
தப்பி ஓடிய அவரை விரட்டிச் சென்று கத்தியால் வெட்டியதில் நவீனுக்கு இரண்டு விரல்கள் துண்டாயின.எவ்வகை மூலப்பொருட்களை கொண்டு வெடிகுண்டை தயாரித்துள்ளனர் என கண்டறிய சென்னையில் உள்ள வெடிமருந்து ஆய்வு கூடத்திற்கு டிபன்பாக்ஸ், வெடிமருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

