ADDED : பிப் 22, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் முருகன் கோயில் மலை அடிவாரம் சரவணப் பொய்கை குளம் உள்ளது. இக்குளம் பேரூராட்சி நிர்வாகத்தின் கண்காணிப்பில் உள்ளது. 10 ஏக்கருக்கும் மேல் பரப்பளவுள்ள இந்தக் குளத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் பக்தர்கள் நீராடினர். இத்தனை காலமும் பேரூராட்சி நிர்வாகம் இக் குளத்தை பராமரிக்க தவறிவிட்டது.
தற்போது குளம் மண் மேடாகி புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. மழைக்காலத்தில் குளத்தின் தண்ணீரில் மாசு படிந்து விடுகிறது. அந்நேரம் பக்தர்கள் குளத்திற்கு செல்வதென்றால் முகம் சுளிக்கின்றனர். எனவே, குளத்தை துார்வாரி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.