ADDED : மே 13, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி, : கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர் வேனில் மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.
பின் நேற்று மாலை வேனில் ஊருக்கு திரும்பினார். பள்ளபட்டி அருகே சென்றபோது நாய் குறுக்கே வரவே வேன் நிலை தடுமாறி சென்டர்மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் பழனிச்சாமி 41, தர்மதுரை 16, கோகுலகிருஷ்ணன் 18, பிரசாத் 31, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் காயமுற்று சிங்கம்புணரி, மணப்பாறை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.