ADDED : ஆக 14, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தனியார் ஓட்டலில் வேலை முடிந்து ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை வந்து பார்த்தபோது ஓட்டலின் கல்லா பெட்டியில் பூட்டு உடைக்கப்பட்டு ரூ. 21 ஆயிரம், அலைபேசி திருடப்பட்டிருந்தது.
மாடியில் துாங்கிய ஒரு தொழிலாளியின் சட்டைப் பையில் இருந்த அலைபேசியும் திருடு போனது தெரிந்தது.
ஓட்டல் மேலாளர் ரமேஷ் புகாரில் திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.