ADDED : ஜூலை 01, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் - உசிலம்பட்டி ரோட்டில் மங்கல்ரேவு விலக்கு பகுதியில் பஸ்நிறுத்தம் உள்ளது. ஆனால் நிழற்கூடம் இல்லாததால் இப்பகுதியினர் அவதிப்படுகின்றனர்.
பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்க கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இங்கு, ராஜபாளையம் -- தேனி செல்லும் அனைத்து பஸ்களும் நின்று செல்கின்றன. இதற்காக காத்திருக்கும் பயணிகள் நீண்ட நேரம் கால்கடுக்க வெயிலில் நிற்க வேண்டியுள்ளது. குடும்பத்துடன் வருவோர் மிகவும் சிரமப்படுகின்றனர். வெயில், மழை காலங்களில் அவர்கள் படும் அவதி சொல்லி மாளாது. பஸ் நிறுத்தத்திற்கு நிழற்கூடம் அவசியம் என அதிகாரிகளுக்குத் தெரியாதா. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.