/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'கேட்' கடையில் கழிப்பறை வசதியில்லை
/
'கேட்' கடையில் கழிப்பறை வசதியில்லை
ADDED : ஆக 15, 2024 05:10 AM
அலங்காநல்லுார், : அலங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் ரூ.1.49 கோடி மதிப்பில் வணிக வளாகம் மற்றும் சிமென்ட் தரைத்தளம் அமைக்கும் பணிகள் நடக்கிறது.
இதனால் சில மாதங்களாக அலங்காநல்லுார் பஸ்கள் கேட் கடை பகுதி சந்திப்பு பஸ்ஸ்டாண்டாக பயன்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் கிராமங்களுக்கு செல்ல காத்திருக்கும் பயணிகள் கழிப்பறை வசதியின்றி தவிக்கின்றனர். குறிப்பாக பெண்கள் பள்ளி, கல்லுாரி மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
சிலர் இயற்கை உபாதைக்காக அப்பகுதியில் உள்ள ஓடைப்பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் பணி முடிந்தாலும் இப்பகுதியில் கழிப்பறை தேவை உள்ளது. எனவே கழிப்பறை கட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.