/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கருத்து

ADDED : நவ 09, 2024 06:34 AM
மதுரை: 'தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை' என மதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மத்திய அரசு அனைத்து மாநிலங்களின் சுகாதாரத் துறையை மேம்படுத்தவும், மக்களின் உடல் நலம் பேணவும் நிதி வழங்கி அதை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறது.
அதன் அடிப்படையில், மதுரையில் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை, லட்சக்கணக்கானோர் பயன்பெறும் வகையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் பிரதமர் மோடியே திறந்து வைக்கும் நிலை ஏற்படும்.
எழுபது வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் விரிவுபடுத்தியிருப்பதன் வாயிலாக உலக அளவில் முதியோருக்கு மிகுந்த மரியாதை அளிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது.
1999ல் மூப்பனார் தலைமையில் கூட்டணி அமைந்த போது ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு குறித்த கருத்து முன்வைக்கப்பட்டது. இன்று தமிழகத்தில்பெரும்பாலான கட்சிகள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு இருந்தால் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது என நினைப்பதில் தவறில்லை.
கூட்டணியின் பலம், மக்களின் நம்பிக்கை, வெற்றி வாய்ப்பு, சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவைகளை பொறுத்து அத்தகைய பங்கு அமைய வேண்டும் என்றார்.