/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிக்காக வீடு தேடி வர்றாங்க... மதுரை மாவட்டத்தில் 76 சதவீதம் முடிவு

ADDED : செப் 18, 2024 04:10 AM

மதுரை: மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அக்.18 ல் வரைவு பட்டியல் வெளியிடுவதற்காக தற்போது வரை 76 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு நடவடிக்கைகள் தொடர் பணியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி என 4 கட்டங்களாக இப்பணிகள் தொடர்ந்து நடக்கிறது. அடுத்து வாக்காளர் வரைவு பட்டியல் அக்.18 ல் வெளியிடப்பட உள்ளது. அதற்கு முன்னதாக ஏற்கனவே உள்ள பட்டியலில் உள்ளபடி வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், இரட்டைப் பதிவு உள்ளதா என பரிசீலிக்கும் பணிகள் நடக்கின்றன.
இப்பணிகளில் பூத் லெவல் அலுவலர்கள் (பி.எல்.ஓ.,) வீடுவீடாகச் சென்று சரிபார்க்கும் பணியில் இறங்கியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிக்குள் மொத்தம் 27 லட்சத்து 5 ஆயிரத்து 67 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 20 லட்சத்து 62 ஆயிரத்து 808 பேர் சரிபார்க்கப்பட்டுள்ளன. இதனால் 76 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. சட்டசபை தொகுதி வாரியாக பார்த்தால் சோழவந்தான் தொகுதியில் அதிகபட்சமாக 85 சதவீதம், குறைந்தபட்சமாக மதுரை வடக்கு தொகுதியில் 70 சதவீத பணிகளும் நடந்துள்ளன.
2025 ஜன.1 ல் 18 வயது முடிவடைவோர் புதிய வாக்காளர் பட்டியலில் சேர எப்போதும் விண்ணப்பிக்கலாம். அவற்றை பரிசீலித்து, கள ஆய்வு செய்து பட்டியலில் சேர்க்கச் செய்வர். இப்பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு ஜன.6ல் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிடுவார். தொடர்ந்து சேர்த்தல், நீக்கல் என புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளில் தேர்தல் அதிகாரிகள் இறங்கிவிடுவர்.