/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வளர்ச்சி திட்டப் பணிகள் அமைச்சர் தியாகராஜன் ஆய்வு
/
வளர்ச்சி திட்டப் பணிகள் அமைச்சர் தியாகராஜன் ஆய்வு
ADDED : ஜூலை 27, 2024 06:33 AM

மதுரை : மதுரை மாநகராட்சியில் நடந்து வரும் திட்டப் பணிகளை அமைச்சர் தியாகராஜன் ஆய்வு செய்தார். பணிகள் குறித்து மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் விளக்கினர்.
மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்ட மீனாட்சி அம்மன் கோயில், தளவாய் அக்ராஹாரம், வடக்கு மாசி வீதி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஆரப்பாளையம் பகுதிகளில் ஏற்கனவே நடந்த, நடந்துவரும் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதியில் மின்சார வாரியம் மூலம் மின் கம்பிகளை தரைவழியில் பதித்து செல்லும் பணி, அவ்வை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சி.எஸ்.ஆர்., திட்டத்தில் ரூ. 1.24 கோடியில் கட்டடங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிய பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம், பொது சுகாதார வளாகம், ஆரப்பாளையம் பகுதியில் குடிநீர் மேல்நிலை தொட்டி பணிகளை ஆய்வு செய்தார்.
மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, தலைமை பொறியாளர் ரூபன்சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, உதவி கமிஷனர் ரங்கராஜன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், செயற்பொறியாளர்கள் பாக்கியலட்சுமி, சுந்தரராஜன், சேகர், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவிப்பொறியாளர் ஆறுமுகம், ரமேஷ்பாபு, சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர்கள் கவிதா, ரமேஷ் பங்கேற்றனர்.