/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'மசாஜ்' பெயரில் விபச்சாரம் மூன்று பேர் கைது
/
'மசாஜ்' பெயரில் விபச்சாரம் மூன்று பேர் கைது
ADDED : செப் 13, 2024 05:25 AM
திருமங்கலம்: திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அருகே பாரதி தெருவில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் விசாரித்தனர். வாடிக்கையாளர் போல் எஸ்.ஐ., முத்துராஜா மசாஜ் செய்வதற்கான விவரங்களை கேட்டுள்ளார்.
மசாஜ் செய்ய ரூ. 1500 மட்டும் செலுத்த வேண்டும், மற்ற விவரங்களுக்கு அறைக்குள் தனியாக பணம் கொடுக்க வேண்டும் எனவும், வரவேற்பு அறையில் இருந்த பெண் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் லட்சுமி லதா, எஸ்.ஐ., ஜெயக்குமார் மற்றும் பெண் போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள், மதுரை நபர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். சென்டர் நடத்திய பெண், அவரது கணவர் ஆறுமுகத்தை போலீசார் தேடி வருகின்றனர்.