/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
லாரி மீது கார் மோதல் ம.தி.மு.க., நிர்வாகிகள் மூன்று பேர் பரிதாப பலி

ADDED : ஆக 05, 2024 11:28 PM

மேலுார்:மதுரை காமராஜர்புரம் பச்சைமுத்து, 50, ம.தி.மு.க., மாநில தொண்டர் அணி துணை அமைப்பாளர். இவர் நேற்று முன்தினம் சென்னையில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள, தன் சகோதரர் அமிர்தராஜ், 44, புலிசேகர், 36, உறுப்பினர் பிரபாகரன், 40, உள்ளிட்ட கட்சியினருடன் சென்றார்.
கூட்டம் முடிந்து, மதுரைக்கு திரும்பிய பச்சை முத்து, சென்னையில் மகள் வீட்டில் இருந்த மனைவி வளர்மதியை, 45, உடன் அழைத்து வந்தார். காரை அமிர்தராஜ் ஒட்டினார். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மேலுார், சிட்டம்பட்டி டோல்கேட் அருகே சென்ற போது, ரோட்டோரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது கார் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த பச்சைமுத்து, அமிர்தராஜ், புலிசேகர் இறந்தனர். வளர்மதி மற்றும் பிரபாகரன், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.