sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இறைவன் திருவடியை பிடித்துக் கொண்டால் துன்பங்கள் விலகும்: திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு

/

இறைவன் திருவடியை பிடித்துக் கொண்டால் துன்பங்கள் விலகும்: திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு

இறைவன் திருவடியை பிடித்துக் கொண்டால் துன்பங்கள் விலகும்: திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு

இறைவன் திருவடியை பிடித்துக் கொண்டால் துன்பங்கள் விலகும்: திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு


UPDATED : ஜூன் 01, 2024 09:39 AM

ADDED : ஜூன் 01, 2024 05:00 AM

Google News

UPDATED : ஜூன் 01, 2024 09:39 AM ADDED : ஜூன் 01, 2024 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'இறைவன் திருவடியை இறுக பிடித்துக்கொண்டால் துன்பங்கள் அனைத்தும் விலகும்' என்று ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்

மதுரை தியாகராஜர் கல்லுாரியில் அனுஷத்தின் அனுக்கிரகம், கல்லுாரி நிர்வாகம் சார்பில் மறைந்த தாளாளர் கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது

ராம அவதாரம் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: நாம் மனிதரிடம் காட்டுவது அன்பு. இறைவனிடத்தில் காட்டுவது பக்தி. ராமாயணம், மகாபாரதத்தை உலகம் கொண்டாடுகிறது.

பிறர் துன்பத்தை தன் துன்பமாக கருதி அவன் துன்பத்தை எவன் போக்குகிறானோ அவன் தான் வைஷ்ணவன். நமது மதம் சனாதன தர்மம், யாராலும் அழிக்க முடியாத ஒன்று. எங்கு சுற்றினும் ரங்கனை சேவி என்பார்கள்.

பகவான் திருவடியை பிடித்துக் கொண்டால் நமது துன்பங்கள் யாவும் விலகும். ஸ்ரீ ராமன் 16 குணங்களை உடையவன். ராமாயணம் கேட்டால் மட்டும் போதாது. அதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். ராம நாமாவை சொன்னால், கேட்டால் எல்லாம் கிடைக்கும். ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் இருக்கிறான். அதனால்தான் உடலை சுத்தத்தோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

சொற்பொழிவு ஜூன் 16 வரை கல்லுாரியில் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. ஏற்பாட்டை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us