sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

முகூர்த்த நாட்களில் திணறும் திருப்பரங்குன்றம்; பக்தர்கள், மக்கள் அவதியோ அவதி

/

முகூர்த்த நாட்களில் திணறும் திருப்பரங்குன்றம்; பக்தர்கள், மக்கள் அவதியோ அவதி

முகூர்த்த நாட்களில் திணறும் திருப்பரங்குன்றம்; பக்தர்கள், மக்கள் அவதியோ அவதி

முகூர்த்த நாட்களில் திணறும் திருப்பரங்குன்றம்; பக்தர்கள், மக்கள் அவதியோ அவதி


ADDED : ஜூலை 08, 2024 12:26 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் மக்களும், பக்தர்களும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

முகூர்த்த நாட்களில் கோயிலில் அதிக திருமணங்கள் நடக்கின்றன. தவிர ஊருக்குள் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட மண்டபங்களிலும் திருமணம் நடக்கிறது. தெப்பக்குளம், சரவணப்பொய்கை செல்லும் வழியில் வாகன காப்பகங்கள் உள்ளன. முகூர்த்த நாட்களில் வரும் வாகனங்களை தற்காலிகமாக மேம்பாலத்திற்கு அடியிலும், சர்வீஸ் ரோட்டிலும் நிறுத்த போலீசார் அறிவுறுத்துகின்றனர். இடம் இல்லாத பட்சத்தில், போக்குவரத்து அதிகம் உள்ள ஜி.எஸ்.டி., மெயின் ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இரண்டு மேம்பாலங்களுக்கும் இடைப்பட்ட மெயின் ரோட்டிலுள்ள திருமண மண்டபங்கள் முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இதனால் அந்த ரோடுகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேசமயம் சரவணப் பொய்கை அருகே உள்ள வாகன காப்பகம் வெறிச்சோடி கிடக்கிறது.

தீர்வு கிடைக்குமா


முகூர்த்த நாட்களில் சுவாமி தரிசனத்திற்கு வரும் கார்களும் தடுக்கப்படுவதால் வயதானவர்கள், உடல்நிலை பாதித்தவர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். சுவாமி தரிசனம், திருமணத்திற்கு வரும் வாகனங்களை 16 கால் மண்டபம், கீழ ரத வீதி வழியாக அனுமதித்து கோயில் அலுவலகம் அருகே ஆட்களை இறக்கிவிட செய்து காப்பகத்தில் வாகனங்களை 'பார்க்கிங்' செய்யலாம்.

சுவாமி தரிசனம் முடித்த பின்பு இறக்கி விட்ட இடத்திலேயே மீண்டும் 'பிக் அப்' செய்ய அனுமதித்தால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.

முகூர்த்த நாட்களில் கூடுதல் போலீசாரை நியமித்து வாகனங்களை ஒழுங்குபடுத்தவும், மெயின் ரோடு, ரத வீதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கவும், போக்குவரத்தை சீர்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us