/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரேஷன் கடையில் கருவிழி பதிவு செய்யுங்கண்ண; இணைய தாமதம் தவிர்க்க இதுதான் வழியண்ணே
/
ரேஷன் கடையில் கருவிழி பதிவு செய்யுங்கண்ண; இணைய தாமதம் தவிர்க்க இதுதான் வழியண்ணே
ரேஷன் கடையில் கருவிழி பதிவு செய்யுங்கண்ண; இணைய தாமதம் தவிர்க்க இதுதான் வழியண்ணே
ரேஷன் கடையில் கருவிழி பதிவு செய்யுங்கண்ண; இணைய தாமதம் தவிர்க்க இதுதான் வழியண்ணே
ADDED : செப் 03, 2024 05:46 AM
மதுரை: இணையதள சேவை பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் கூட்டுறவு ரேஷன் கடைகளில் நுகர்வோரின் கைரேகைக்கு பதிலாக கருவிழி பதிவு செய்வதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் 1,351 கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் குடும்பத்தினரின் விரல்ரேகை பதிவு செய்யப்பட்டு கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான விற்பனை முனைய இயந்திரத்தின் (பி.ஓ.எஸ்.) 'சிம்' கார்டில் பழைய 2 ஜி, 3 ஜி சேவை மட்டுமே இருப்பதால் கைரேகை பதிவு செய்யும் போது தாமதம் ஏற்படுகிறது.
சில நேரங்களில் விரல்கள் காயம்பட்டிருந்தாலோ, தேய்ந்திருந்தாலோ ரேகை முழுமையாக தெரியாமலும் பிரச்னை ஏற்படுகிறது. பதிவு தாமதத்தால் கார்டுதாரரின் விரலை மாற்றி மாற்றி வைக்கும்படி கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
இதனால் ஒரு கார்டுதாரரைப் பதிவு செய்வதற்கே 10 நிமிடங்களுக்கும் மேலாகிறது. இதற்கு பதிலாக கருவிழி பதிவு நடை முறையை அமல்படுத்த வேண்டும். இதற்கு சில வினாடிகளே தேவைப்படுவதால் பதிவு நேரமும், பொதுமக்களின் முணுமுணுப்பும் குறையும்.
கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி கூறியதாவது: முன்னோட்ட அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் 75 கடைகளில் கருவிழியை பதிவு செய்யும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இது எளிதாகவும் விரைவாகவும் உள்ளது. கார்டுதாரர்களின் விழிகளை பதிவு செய்வதால் நுகர்வோர் தாமதமின்றி பொருட்களை வாங்க முடியும். மாவட்ட வழங்கல் அலுவலகம் அனைத்து கடைகளுக்கும் கருவிழிப் பதிவு இயந்திரம் வழங்கினால் தாமதத்தை தவிர்க்க முடியும் என்றார்.