/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தோடனேரி கண்மாய் நீர் வெளியேற்றம் எஸ்.பி., நடவடிக்கைக்கு உத்தரவு
/
தோடனேரி கண்மாய் நீர் வெளியேற்றம் எஸ்.பி., நடவடிக்கைக்கு உத்தரவு
தோடனேரி கண்மாய் நீர் வெளியேற்றம் எஸ்.பி., நடவடிக்கைக்கு உத்தரவு
தோடனேரி கண்மாய் நீர் வெளியேற்றம் எஸ்.பி., நடவடிக்கைக்கு உத்தரவு
ADDED : மே 02, 2024 05:35 AM
மதுரை: சமயநல்லுார் அருகே தோடனேரி கண்மாயிலிருந்து சட்டவிரோதமாக தண்ணீரை வெளியேற்றியவர்கள் மீது போலீசார் மூலம் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தோடனேரி ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: தோடனேரி கண்மாய்க்கு பெரியாறு வைகை கால்வாய் மூலம் நீர் வருகிறது. இருபோக சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில் பிப்., முதல் மே வரை கண்மாய் நீரை விவசாயிகள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. பொதுப்பணித்துறையின் அனுமதியின்றி சிலர் சட்டவிரோதமாக போலி சாவி மூலம் கண்மாய் மதகை திறந்து விவசாய நிலத்திற்கு தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.
கண்மாயை ஆக்கிரமித்து வெள்ளரி, கீரை சாகுபடி செய்கின்றனர். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை பெரியாறு வைகை பாசன செயற்பொறியாளர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: சட்டவிரோதமாக தண்ணீரை திறந்தவர்கள் மீது சமயநல்லுார் போலீசார் மூலம் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்திற்காக கண்மாயில் தண்ணீரை பாதுகாக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

