/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சிகள்/ மார்ச் 8க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சிகள்/ மார்ச் 8க்குரியது
ADDED : மார் 08, 2025 04:01 AM
கோயில்
மாசி மண்டல உற்ஸவம் --- 6ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும் சுவாமியும் மரச் சப்பரத்தில் சித்திரை வீதிகள் புறப்பாடு, காலை 7:00 மணி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும் சர்வ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, சித்திரை வீதிகள் புறப்பாடு, மதுரை ஆதினம் மண்டபம், இரவு 7:00 மணி.
மாசி மகம் தெப்பத்திருவிழா- 7ம் நாள்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, எடுப்புச் சப்பரம், உபய நாச்சியாருடன் வேணுகோபாலன் அலங்காரம் மாடவீதி உலா, இரவு 7:00 மணி.
மாசி பெருந்திருவிழா -- 6ம் உற்ஸவ தினம்: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, ஞானசம்பந்தருக்கு பாலுாட்டிய நிகழ்வு, காலை 7:00 மணி, சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலை, இரவு 7:00 மணி.
பங்குனிப் பெருவிழா - 2ம் நாள்: சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தங்கப்பல்லக்கில் வீதி உலா, காலை 10:00 மணி, வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, கோயில் வாணியர் மண்டபம், இரவு 7:00 மணி.
யஜூர், சாம வேத பாராயணம், பாலானந்த சுவாமிகள் மடம், சன்னதி தெரு, திருப்பரங்குன்றம், காலை 8:30 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் -- ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
மகளிர் தின விழா
அரசு மீனாட்சி மகளிர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம், சுடரி பவுண்டேஷன், பயோனியர் பவுண்டேஷன், பங்கேற்பு: முதல்வர் வானதி, மாவட்ட சமூகநல அலுவலர் திலகம், காலை 10:00 மணி.
ஆரப்பாளையம், பிரிட்டோ பள்ளி அருகில், பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தலைமை: நகர் தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி, ஏற்பாடு: தெற்கு மாவட்ட த.வெ.க., மாலை 6:30 மணி.
எஸ்.பி.ஓ.ஏ., சி.பி.எஸ்.சி., பள்ளி, நாகமலை, தலைமை: சங்க மண்டல செயலாளர் கணபதி, சிறப்பு விருந்தினர்: அரசு மீனாட்சி மகளிர் கல்லுாரி பேராசிரியர் பிரியதர்ஷினி, ஏற்பாடு: எஸ்.பி.ஐ., வங்கி அலுவலர்கள் சங்கம், காலை 9:30 மணி.
பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, அரசனுார், காலை 10:00 மணி.
பெண்கள் சமத்துவம் -குறித்த கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: விரல்ரேகை பிரிவு எஸ்.ஐ., பத்மாவதி, ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., காலை 9:30 மணி, பெண்கள் மேம்பாடே உலக மேம்பாடு - கருத்தரங்கு, சிறப்பு விருந்தினர்: மதுரை தங்கமயில் ஜூவல்லரி பொது மேலாளர் சைலஜா, ஏற்பாடு: பெண்கள் மேம்பாடு அமைப்பு, காலை 10:00 மணி.
சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, அவனியாபுரம், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா, எஸ்.ஐ., விஜயலட்சுமி, மாவட்ட பாதுகாப்பு அலுவலர் வாசுகி, ஏற்பாடு: மகளிர், இளைஞர் நலன் மன்றம், மதியம் 1:00 மணி.
எம்.எஸ்., செல்லமுத்து கார்டன், அழகர்கோவில், சிறப்பு விருந்தினர்: நவிக் இயற்கை பொருட்கள் நிறுவனர் லதா, பங்கேற்பு: எம்.எஸ்.சி.டி., நிர்வாக இயக்குனர் ராஜகுமாரி, சுபிட்சம் தலைவர் கலைவாணி, ஏற்பாடு: சுபிட்சம் நிறுவனம், காலை 10:30 மணி.
தானம் அறக்கட்டளை மைய அலுவலகம், மகபூப்பாளையம், மதுரை, பங்கேற்பு: மாநகராட்சி கமிஷனர் சித்ரா, கனரா வங்கி துணை பொது மேலாளர் பாக்கிய ரேகா, அறக்கட்டளை திட்டத் தலைவர் அகிலா தேவி, காலை 10:00 மணி.
ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை, குட்ஷெட் தெரு, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: லேடி டோக் கல்லுாரி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, ரோட்டரி கிளப் தாரணி, தடாகம் கவுன்சிலிங் நிறுவனர் பத்மாவதி, பங்கேற்பு: டாக்டர் ஸ்ரீனிவாசன், மாலை 6:00 மணி.
யாதவர் கல்லுாரி, மதுரை, எழுந்து பிரகாசியுங்கள் தடைகள் உடையட்டும் - கருத்தரங்கு, சிறப்பு விருந்தினர்: அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர் பாருபிரியதர்ஷினி, பங்கேற்பு: முன்னாள் செயலாளர் கண்ணன், தலைவர் ஜெயராமன், காலை 10:00 மணி.
வைகை பொறியியல்கல்லுாரி, தெற்குத்தெரு, மேலுார், சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் மேலாண்மை கல்லுாரி துணை பேராசிரியர் மஞ்சுளா, பேராசிரியர் சுஜாதா, ஏற்பாடு: பெண்கள் மேம்பாட்டு கழகம், காலை 10:00 மணி.
பள்ளி, கல்லுாரி
26ம் ஆண்டு விழா: மதுரை சிவகாசி நாடார் மீனாட்சி பெண்கள் கல்லுாரி, சிறப்பு விருந்தினர்: திண்டுக்கல் நாகா நிறுவனத்தின் சி.இ.ஓ., லட்சுமி, பங்கேற்பு: தலைவர் அண்ணாமலை, முதல்வர் விசுமதி, மாலை 5:00 மணி.
மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்: யாதவர் கல்லுாரி, திருப்பாலை, மதுரை, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, காலை 11:00 மணி.
போலீசார், கல்லுாரி மாணவியர் பங்கேற்கும் மகளிர் தின மாரத்தான் போட்டி: ஆயுதப்படை மைதானம், மதுரை, துவக்கி வைப்பவர்: போலீஸ் கமிஷனர் லோகநாதன், ஏற்பாடு: நகர் போலீசார், காலை 6:00 மணி.
பொது
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட தினமலர் நாளிதழ் இணை நிர்வாகஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு பாராட்டு விழா: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை, ஏற்பாடு: மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரிகளின் மேலாண்மை சங்கம், காலை 10:45 மணி.
சுற்றுலா கலைவிழா கரகாட்டம், தப்பாட்டம், வீணை கச்சேரி: கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கு, கீழக்கரை, அலங்காநல்லுார், ஏற்பாடு: அரசு சுற்றுலாத்துறை, மாலை 5:00 மணி.
சவுராஷ்டிரா மாணவர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., இலவச பயிற்சி வகுப்பு: கோவிந்த தாஸ ஸேவா ஸமாஜம், 25, மகால் 6வது தெரு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா ஸபா, காலை 10:00 மணி முதல்.
விளையாட்டு
5வது மாநில அளவிலான கல்லுாரி அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி நிறைவு விழா: லேடி டோக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை உடற்கல்வி துறைத் தலைவர் ரமேஷ், பங்கேற்பு: முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, விளையாட்டு மேம்பாட்டு துறை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாலை 4:00 மணி.
18 வயதுக்குட்பட்டோருக்கான டென்னிஸ் போட்டி: மதுரைக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: டி.வி.எஸ்., மொபிலிட்டி, காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
மருத்துவம்
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, பங்கேற்பு: டாக்டர்கள் இயக்குனர் சுனிதா, நிர்வாக இயக்குனர் பிரபாகரன், காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
நரம்பியல் சிறப்பு சிகிச்சை முகாம்: சாந்தகிரி மருத்துவமனை, 10, லேக் வியூ ரோடு, கே.கே., நகர், மதுரை, பங்கேற்பு: சித்தா டாக்டர் சாபேல், காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி.
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை, சிகிச்சை தொகுப்பு: ஜெயன் மருத்துவமனை, 178, காமராஜர் ரோடு, மதுரை, பங்கேற்பு: டாக்டர்கள் லட்சுமி, அமுதா, கணபதி ராமன், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, டாக்டர் சரவணா மாதவ், மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, டாக்டர் லட்சுமி, மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
கண் பரிசோதனை முகாம், ரத்த தான முகாம்: மஞ்சம்பட்டி, ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசியர் கல்லுாரி, மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனை, காலை 10:00 மணி முதல்.
கண்காட்சி
மீனாட்சி பேன் ஹவுசின் ஏ.சி., கண்காட்சி, விற்பனை: மதுரா கோட்ஸ் மில் அருகில், நியூ ஜெயில் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பட்டு, பனாரஸ், காட்டன் சேலைகள், வேட்டிகள், சட்டைகள், மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவைகளின் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.