தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி - ஜூலை 17

இன்றைய நிகழ்ச்சி - ஜூலை 17

இன்றைய நிகழ்ச்சி - ஜூலை 17


ADDED : ஜூலை 17, 2024 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2024 12:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

ஆடிப் பெருந்திருவிழா 5ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சுந்தரராஜபெருமாள் சிவகங்கை சமஸ்தானம் மறவர் மண்டபத்திற்கு தங்கப் பல்லக்கில் எழுந்தருளல், காலை 6:45 மணி, சேஷ வாகனத்தில் எழுந்தருளல், இரவு 7:00 மணி.

பால்குடம் எடுத்தல்: காளியம்மன் கோயில், மேலுார், காலை 9:00மணி, முளைப்பாரி ஊர்வலம், மாலை

5:00மணி

பக்தி சொற்பொழிவு

மாதாந்திர அனுஷ விழா, மகா பெரியவர் விக்ரகத்திற்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், வெள்ளி பாதுகைக்கு சிறப்பு பூஜை, மாலை 5:00 மணி, குரு மகிமை சிறப்பு சொற்பொழிவு, பேசுபவர் - இந்திரா சவுந்தர்ராஜன், மாலை 6:00 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.

ஏகாதசி - ஸ்ரீராம நாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென் திருப்பேரை அரவிந்த் லோச்சனன் சுவாமி, மதன கோபால சுவாமி கோயில், மதுரை, மாலை 6:30 மணி.

சுவாமி சிவானந்தரின் மகா ஆராதனை விழாவை முன்னிட்டு 'ராமானுஜரும் சிவானந்தரும்' - சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சவுந்தரராஜன், பழைய திருக்கல்யாண மண்டபம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரை தெய்வ நெறிக் கழகம், மாலை 6:00 மணி.

திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

பகவத்கீதை சம்பூர்ண பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - ஆஸ்ரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்தா ஆஸ்ரமம், 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, காலை 10:30 மணி.

அனுஷ உற்சவம்: குரு அருளும் திரு அருளும்: நிகழ்த்துபவர் - கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், எஸ்.எம்.கே. திருமண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

பொது

விதைத் திருவிழா 5.0: மதுரை காமராஜ் பல்கலை, சிறப்பு விருந்தினர்: பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, துணைமேயர் நாகராஜன், உழவர் நலத்துறை இணை இயக்குனர் சுப்புராஜ்,பங்கேற்பு: தென் மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் அன்ன வயல் காளிமுத்து, செயலாளர் ரமேஷ், துணைத் தலைவர் அலெக்ஸ், ஏற்பாடு: பல்கலை தகவல் தொடர்புத் துறை, காலை 8:00 மணி.

பள்ளி, கல்லுாரி

வணிகவியல் துறை ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா: மேரியாட் ஓட்டல், மதுரை, பங்கேற்பு: பத்மராஜம் குழுமம் நிறுவனத் தலைவர் பாலன், அக்பர் பாட்ஷா, ஏற்பாடு: மதுரை கல்வி மாவட்ட அலுவலகம், காலை 9:00 மணி.

பாரம்பரிய நெல் வகைகளும் அதன் பாதுகாப்பும் குறித்து கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் கல்லுாரி தாவரவியல் துறை உதவிப்பேராசிரியர் கார்த்திகேயன், பங்கேற்பு: முதல்வர் ராமமூர்த்தி, ஏற்பாடு: தாவரவியல் துறை, மதியம் 1:30 மணி.

மருத்துவம்

இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us