ADDED : செப் 11, 2024 06:18 AM
கோயில்
ஆவணி மூலத் திருவிழா 7ம் நாள் -வளையல் விற்ற லீலை திருவிளையாடல் மற்றும் பட்டாபிேஷகம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சுவாமி, அம்மன் தங்கச் சப்பரத்தில் புறப்பாடு, காலை 11:00 மணி, இம்மையில் நன்மை தருவார் கோயில் தெரு, மேலமாசி வீதி மேலக்கோபுர தெரு, வடக்கு, கீழ ஆவணி வீதி வழியே சுவாமியும் அம்மனும் தங்கப்பல்லக்கில் கோயில் சேருதல், மாலை 4:00 மணி, சுவாமிக்கு பட்டாபிஷேகம், அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி செங்கோல் பெற்று சுவாமியிடம் சேர்ப்பு, மாலை 6:30 மணி, பக்தர்களுக்கு விருந்து, பால்மீனாஸ் திருமண மஹால், மதியம் 12:30 மணி, இரவு 7:00 மணி.
ஆவணி மூலத் திருவிழாவிற்கு மாணிக்க வாசகர் புறப்பாடு, மாணிக்க வாசகர் கோயில், திருவாதவூர், காலை 6:30 மணி.
கும்பாபிஷேகம்: அகிலாண்டேஸ்வரி அம்மன் திருமூலநாத சுவாமி கோயில், சோழவந்தான், தென்கரை, கிராம சாந்தி, பிரவேச பலி, மாலை 5:00 மணி.
வளர்பிறை அஷ்டமி சுவர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை, ேஹாமம், மாலை 4:30 மணி, அபிேஷகம், மாலை 6:30 மணி. வரசித்தி விநாயகர் கோயில், கீழப்பனங்காடி, மதுரை.
முளைப்பாரி திருவிழா - பூச்சொரிதல்: தல்லாகுளம் மாரியம்மன் கோயில், மதுரை, மாலை 4:45 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் -- விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன் பாபுஜி, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.
ஸத்ஸங்கம், கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் -- ஹரிதாஸ், நாமத்வார், அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:30 மணி.
ஸ்ரீ மகா பெரியவா மகிமை: நிகழ்த்துபவர் -- எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன், விஸ்வாஸ் கருத்தரங்கு கூடம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை மற்றும் பாரதியார் நினைவு நாள்: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், பங்கேற்பு: ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் முருகன், ஏற்பாடு: சுவாமி விவேகானந்த படிப்பக மையம், பாரதி சிந்தனை அரங்கம், காலை 10:30 மணி.
ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: பாத்திமா கல்லுாரி ஆங்கில ஆராய்ச்சி மையம் இணைப்பேராசிரியர் சாயிரா பானு, ஏற்பாடு: ஆங்கிலத்துறை, காலை 11:00 மணி.
அரசு வேலைகளில் தொழில் வழிகாட்டுதல் குறித்த கருத்தரங்கு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முன்னாள் எஸ்.பி.ஐ., அதிகாரி சஹானா, முதல்வர் சீனிவாசன், செயலாளர் குமரேஷ், ஏற்பாடு: வர்த்தகத் துறை, காலை 11:00 மணி.
பாரதியார் சொற்பொழிவு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை தமிழியற்புலத் தலைவர் ராமராஜபாண்டியன், ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 10:00 மணி.
ஈக்கோ கிளப் திறப்பு விழா: வேலம்மாள் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் அல்லி, சிறப்பு விருந்தினர்: அமெரிக்கன் கல்லுாரி விலங்கியல் துறை துணைப்பேராசிரியர் ராஜேஷ், ஏற்பாடு: வேதியியல் துறை, மதியம் 2:00 மணி.
ஹந்தி மொழி வினாடி வினா போட்டி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: துணைப்பேராசிரியர் ராஜேஸ்வரி, காலை 10:00 மணி.
பள்ளி ஆண்டு விழா: பி.எம்., ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி, மதுரை, பங்கேற்பு: கலெக்டர் சங்கீதா, மாலை 5:30 மணி.
பொது
காந்தியடிகளின் ஆன்மிக சீடர் வினோபா பாவே பிறந்த நாள், மகாகவி பாரதியார் நினைவு நாளையொட்டி ஹிந்தி பேச்சுப்பயிற்சி: பாஸ்டன் கல்லுாரி, பாசிங்காபுரம், மதுரை, தலைமை: காந்தி மியூசியம் செயலாளர் நந்தாராவ், முன்னிலை: கல்லுாரி இயக்குநர் வைரவராஜா, பயிற்சி அளிப்பவர்: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
வினோபா ஜெயந்தி விழா: வைகை வட்டார களஞ்சிய அலுவலகம், அப்பன் திருப்பதி, தலைமை: தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் வாசிமலை, சிறப்பு விருந்தினர்கள்: டாக்டர் நஜிமா ராணி, அப்பன் திருப்பதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் கீதா, ஒருங்கிணைப்பாளர்: சுகம் சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தையா, காலை 9:00 மணி.
பாரதியார் நினைவு தினம்: ஹார்விபட்டி பூங்கா, தலைமை: தலைவர் அய்யல்ராஜ், ஏற்பாடு: ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம், காலை 10:00 மணி.
கண்காட்சி
புத்தகத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, மாலை 4:00 மணி, தலைமை: மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், கவிஞர் நெல்லை ஜெயந்தா, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பபாசி, பொது நுாலக இயக்கம், மாலை 6:00 மணி.
வண்ண மீன்கள் கண்காட்சி, வீட்டு உபயோகப் பொருட்காட்சி: காந்தி மியூசிய மைதானம், மதுரை, மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை.
விளையாட்டு
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள, குழு விளையாட்டு போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 8:00 மணி.