ADDED : செப் 03, 2024 05:54 AM
கோயில்
திரிவேணி விழா: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பகவத் கீதை பாராயணம், காலை 6:00 மணி, பெரியபுராணம் சிறப்புத் தொடர் விரிவுரை, நிகழ்த்துபவர்: பொள்ளாச்சி தத்துவ ஞான சபை ஆச்சாரியார் சுவாமி வேதாந்த ஆனந்த சரஸ்வதி, காலை 7:00 மணி, தலைமை: தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி, தொடக்கவுரை: பி.டி.ஆர்., பொறியில் கல்லுாரி நிறுவனர் தனவேலன், சிறப்புரை: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், மாலை 6:00 மணி.
சர்ச் பெருவிழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணா நகர், மதுரை, திருப்பலி:- பாதிரியார் பிரவீன்தாஸ், காலை 11:30 மணி, வட்டார அதிபர் அருளானந்தம், மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் -- பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00
பகவத் கீதை 5ம் அத்தியாயம் பாராயணம்: சதஸ்லோகி: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:00 மணி.
ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- சனத்குமார் பாகவதர், நாமத்வார், அய்யர்பங்களா, மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பொது
வணிக உரிமையாளர்கள் சந்திப்பு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், மதுரை, பங்கேற்பு: டோன் டீலிங்ஸ் நிறுவனர் முத்து, சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் மோகன்ராம், மாலை 6:00 மணி.
நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீஸ் செயற்குழுக் கூட்டம்: எம்.பி.சி., ஹால், மஹபூப்பாளையம், பங்கேற்பு: தலைவர் ராஜகோபால், செயலாளர் ஜெகன்மோகன், பொருளாளர் பாஸ்கரன், மாலை 6:30 மணி.
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: மேலமாசி - வடக்குமாசி வீதிகள், மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி
கல்லுாரி ஆண்டு விழா: சேது பொறியியல் கல்லுாரி, காரியாபட்டி, சிறப்பு விருந்தினர்: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், வகேன் டெக்னாலஜீஸ் பொதுமேலாளர் சரத் சந்தர், காலை 10:00 மணி, முத்தமிழ் மன்றம், பங்கேற்பு: கலாசாரத் துறை துணை இயக்குநர் ஹேமநாதன், ஹனிவெல் பொறியாளர் விஜய சரவணன், தலைவர் முகமது ஜலீல், மதியம் 2:00 மணி.
மின் ஆற்றல் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: தொழில்நுட்ப பயிற்சி மேம்பாட்டு மையம் மூத்த மேலாளர் கதிர்காம செல்வன், விழிப்புணர்வு அளிப்பவர்கள்: இளங்கலை கணிதத்துறை மாணவர்கள், ஏற்பாடு: தமிழ்நாடு மின்சார வாரியம், கணிதத்துறை, காலை 10:30 மணி.
எல்.பி.ஜி., வாயு பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு: பாத்திமா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: மதுரை இண்டேன் மண்டல பொதுமேலாளர் பிரேமா, இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளர் சம்பத்குமார், ஏற்பாடு: வேதியியல் ஆராய்ச்சி மையம், மதியம் 12:00 மணி.
தொழில் நிறுவனங்களில் பொருளியல் கல்வியின் பங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், இண்டிஜினஸ் பேஷன்ஸ் நிறுவனர் பீட்டர் சகாய ராஜ், துறைத் தலைவர் கண்ணபிரான், ஏற்பாடு: பொருளாதாரத் துறை, காலை 11:15 மணி.