ADDED : ஏப் 26, 2024 12:31 AM
கோயில்
சித்திரைத் திருவிழா - அழகர் கள்ளர் வேடமிட்டு பூப்பல்லக்கில் அழகர்கோவில் திரும்புதல்: அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயிலில் எழுந்தருளல்,காலை 6:00 மணி, அம்பலகாரர் மண்டபத்தில் எழுந்தருளல், காலை 7:00 மணி, மூன்றுமாவடியில் எழுந்தருளல் இரவு 7:00 மணி, மறவர் மண்டபத்தில்எழுந்தருளல், திருமஞ்சனம், இரவு 10:00 மணி.
அவதார ஆகமபூர்ண மங்கள பூஜை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை5:30 மணி.
அனுஷ விழா, மஹா பெரியவர் விக்ரகத்திற்கு அபிேஷகம், அலங்காரம், சிறப்பு பூஜை, மாலை 5:00 மணி, குரு மகிமை என்ற தலைப்பில் சொற்பொழிவு, பேசுபவர்: இந்திரா செளந்தர்ராஜன், மாலை 6:00 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.
காஞ்சி மஹா பெரியவா விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம்: மாலை 5:30 மணி. மீனாட்சி திருக்கல்யாணம், நிகழ்த்துபவர் - கவிஞர் சண்முக திருக்குமரன், மஹா பெரியவா கோயில், மாலை 6:30 மணி 13, பொன்மேனி நாராயணன் ரோடு,எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு.
புதிய வளனார் பெருவிழா: புனித வளனார் சர்ச், ஞானஒளிவுபுரம், மதுரை, மறையுரை வழங்குபவர்: மதுரை எம்.எம்.எஸ்.எஸ்.எஸ்., துணைச் செயலர்ராஜன், மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
சத்சங்கம், சிவபுராணம் பாராயணம்: நிகழ்த்துபவர் - சிவானந்த சுந்தரானந்தா, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
லலிதா சகஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
பொது
தொழிற்சாலையில் கடைபிடிக்கவேண்டிய ஆவணங்கள், சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்: மடீட்சியா, மதுரை, தலைமை: தலைவர் லட்சுமிநாராயணன், சிறப்பு விருந்தினர்: மதுரை தொழில்துறை பாதுகாப்பு இணை இயக்குநர் வேலுமணி, துணை இயக்குநர் சுடலை செல்வம், சிவகங்கை துணை இயக்குநர் கிஷோரிஜீ, மாலை 4:30 மணி.
லீட் - கோடைகால முகாம்: சின்மயாமீனாட்சி, 7வது குறுக்குத் தெரு, டோக் நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா தேவி குரூப், சின்மயா யுவகேந்திரா, காலை9:30 மணி.
சர்வ சமய வழிபாடு, சர்வோதய தலைவர் அரியரத்னே மறைவிற்கு அஞ்சலி கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பொருளாளர் செந்தில்குமார், செயலாளர் நந்தாராவ், மாலை 4:30 மணி.
நகர் அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் துவக்கம்: மாவட்ட அலுவலகம், மதுரை, துவக்கி வைப்பவர்: முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, காலை 10:30 மணி.
ஜி.எஸ்.டி., வரிமுறைகள், திருத்தம், தீர்வுகள் குறித்த விளக்கக் கூட்டம்: தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, விளக்கமளிப்பவர்கள்: ஆடிட்டர்கள் சரவணக்குமார், பாலசுப்பிரமணியன், ஏற்பாடு: தொழில் வர்த்தக சங்கம், மாலை 4:30 மணி.
பள்ளி, கல்லுாரி
12வது கல்லுாரி நாள் விழா - ஒடிஸ்ஸி'24: வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்வி குழுமசேர்மன் முத்துராமலிங்கம், சிறப்பு விருந்தினர்: ஏ.ஐ.சி.டி.இ., ஆலோசகர் ரமேஷ் உன்னிகிருஷ்ணன், சென்னை டி.சி.எஸ்., பொது மேலாளர் லக் ஷ்மண்பிரகாஷ், காலை 10:00 மணி.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இன்றைய வளர்ச்சி நிலை - கருத்தரங்கம்: பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரி,அரசனுார், தலைமை: கல்வி குழும நிறுவனர் மலேசியா பாண்டியன், சிறப்பு விருந்தினர்: லண்டன் பல்கலை இணை பேராசிரியர் ஜின்-சின் யாங், காலை 11:00 மணி.
மருத்துவம்
இலவச காது மூக்கு தொண்டை பரிசோதனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

