ADDED : ஆக 02, 2026 07:21 PM
கோயில்
* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.
* கருப்பண்ண சுவாமிக்கு சந்தன சாத்துப்படி: கன்னிமார் கோயில், தென்பரங்குன்றம், மதுரை, காலை 11:00 மணி.
* ஆடி உற்ஸவம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், 3வது செக்டர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, மேலஅனுப்பானடி, மதுரை, அம்மனுக்கு 18 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், காலை 10:00 மணி.
* ஆடி 18 கருப்பசாமி திருவிழா: சித்திவிநாயகர், செல்வமுத்துக்குமாரசாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 8:00 மணி.
* ஆடிப் பெருவிழா: முத்துமாரியம்மன் கோயில், காமாட்சி நகர், விளாங்குடி, மதுரை, ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.
* ஆண்டு திருவிழா: சீலைக்காரி அம்மன், பெரியகருப்பண்ண சுவாமி, மலையாள கருப்பண்ண சுவாமி, நொண்டி கருப்பண்ண சுவாமி, நாகம்மாள், ராக்காயி அம்மன், கன்னிமூல கணபதி, அழகுமலையான் கோயில், சல்லக்குளம், வாடிப்பட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், அன்னதானம், காலை 7:00 மணி முதல்.
* ஆண்டுத் திருவிழா – திருவிளக்கு பூஜை: செல்வ விநாயகர், முத்துமாரியம்மன் கோயில், 60 அடி ரோடு, செல்லுார், மதுரை, மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* திருமந்திரம்: நிகழ்த்துபவர் – திருமாவளவன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
* கடோபநிஷத் விளக்கவுரை: நிகழ்த்துபவர் – ஸ்ரீகாந்த், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
* முதலாண்டு எம்.பி.ஏ., மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்தும் நிகழ்வு: ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, முன்னிலை: ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குநர் சுப்ரமணியன், சிறப்பு விருந்தினர்: ராப்சோடி மியூசிக் பவுண்டேஷன், க்ரூ எட்டெக் நிறுவனத்தின் நிறுவனர் அனில் சீனிவாசன், காலை 11:00 மணி.
பொது
* மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காலை 10:00 மணி.
* பதிவாளரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், வடக்கு வெளிவீதி, மதுரை, ஏற்பாடு: அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம், மாலை 5:30 மணி.
* மின் கட்டண உயர்வை கண்டித்து அமைச்சருக்கு வாழ்த்து மடல் அனுப்பும் போராட்டம்: தபால் அலுவலகம் அருகே, கலெக்டர் அலுவலகம், மதுரை, ஏற்பாடு: மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், காலை 10:30 மணி.
* ஆடிப் பெருக்கை முன்னிட்டு வைகை ஆற்றுத் திருவிழா: அழகர் ஆற்றில் இறங்கும் பகுதி, ஆழ்வார்புரம், மதுரை, தலைமை: வைகை நதி மக்கள் இயக்க தலைவர் ராஜன், சிறப்புரை: பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன், பங்கேற்பு: எம்.எல்.ஏ.,க்கள் கல்லாணை, கோபிசன், மாலை 4:30 மணி, தீபாராதனை, மாலை 6:00 மணி.
* வாசகர் வட்டம் துவக்கம், ‘அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள்’ நுால் வெளியீடு, நுால் விமர்சனம் – முப்பெரும் விழா: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலகோபுரத் தெரு, மதுரை, தலைமை: காந்திகிராம பல்கலை பேராசிரியர் ஆனந்தகுமார், நுால் வெளியிடுபவர்: அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் தலைவர் சாமித்துரை, பெறுபவர்: புரட்சிப் பாவலர் மன்றம் தலைவர் வரதராஜன், மாலை 5:30 மணி.
விளையாட்டு
* பள்ளிக் கல்வித்துறை சார்பில் குறுவட்ட தடகளம், டேக்வாண்டோ, பாக்சிங் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 7:00 மணி முதல்.
மருத்துவம்
* இலவச பாத சிகிச்சை தெரபி முகாம்: தென்னிந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கம், அய்யனார் பொன் முனியாண்டி கோயில் வளாகம், சம்மட்டிபுரம் மெயின் ரோடு, மதுரை, ஏற்பாடு: ஹெல்த்திபை வெல்நஸ் சென்டர், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
* முதுகு தண்டுவட மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் அஸ்வின் தீபக் ராஜன், மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை, விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
கண்காட்சி
* உங்க வீடு, உங்க சாய்ஸ் – ஆடி 18 முன்னிட்டு வீடு விற்பனை கண்காட்சி: ஜே.சி.ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, ஏற்பாடு: எனர்ஜி லிவிங்ஸ்கேப்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
