UPDATED : ஆக 08, 2026 06:57 PM
ADDED : ஆக 08, 2026 06:52 PM
ஆக. 9
கோயில்
* ஆடி உற்ஸவம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், மேலஅனுப்பானடி ஹவுசிங்போர்டு, மதுரை, பூப்பல்லாக்கு ஊர்வலம், மாலை 6:00 மணி.
* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.
* கருப்பண சுவாமிக்கு சந்தன சாத்துப்படி திருவிழா: கன்னிமார் கோயில், தென்பரங்குன்றம், மறுபூஜை விழா, காலை 7:45 மணி.
* கோயில் உற்ஸவம்: வனபத்திர காளியம்மன் கோயில், முரட்டன்பத்திரி, மதுரை, பொங்கல் வைத்து அம்மனுக்கு அபிஷேகம், மஞ்சள் நீராட்டு, கலை நிகழ்ச்சி, இரவு 8:00 மணி.
* ஆண்டு திருவிழா: செல்வ விநாயகர், முத்துமாரியம்மன் கோயில், 60 அடி ரோடு, செல்லுார், மதுரை, அன்னதானம், காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயுமானவர் சுவாமி பாடல்கள் விளக்கவுரை, இரவு 7:00 மணி.
* ஏகாதசியை முன்னிட்டு ராமநாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* தோழமை நெறி: நிகழ்த்துபவர் - சிவயாழினி, மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* ஏகாதசி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மதியம் 12:00 மணி.
பொது
* 'மதுரை ரன் 2026' - துாய மதுரைக்கான ஓட்டம்: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், காலை 6:00 மணி.
* மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம்: காமராஜர் ரோடு அரசமரப் பிள்ளையார் கோயிலில் இருந்து காந்தி பொட்டல் காந்தி சிலை வரை, மதுரை, ஏற்பாடு: நகர் காங்கிரஸ், காலை 10:30 மணி.
* உலக நண்பர்கள் தின கொண்டாட்டம்: ராயல் பார்ட்டி ஹால், கே.கே.நகர், மதுரை, முன்னிலை: ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் சண்முகசுந்தரம், சிறப்பு விருந்தினர்: ஜவஹர் அசோசியேட்ஸ் சுரேஷ், ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் மதுரை ஸ்டார், காலை 11:00 மணி.
* கண்ணதாசனின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு பேசும் கலை பயிற்சி: மதுரை திருவள்ளுவர் மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, சண்முகத் திருக்குமரனின் 'கண்ணதாசன் ஒரு ஜீவ நதி' சிறப்புரை, ஏற்பாடு: சண்சரண் சமூகம், கல்விநல அறக்கட்டளை, மதுரை இலக்கிய பேரவை, காலை 10:30 மணி.
மருத்துவம்
* விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
கண்காட்சி
* சிட்கான் - வர்த்தக கண்காட்சி: அருணாச்சலம் கமலாம்பாள் அரங்கம், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், காலை 9:30 முதல் இரவு 9:00 மணி வரை.
* தி இன்டர்நேஷனல் ஒலிம்பியன் சர்க்கஸ்: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 11:00 மணி, மதியம் 2:00 மணி, மாலை 4:30 மணி, இரவு 7:30 மணி.
