தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 09, 2026 10:08 PM

ADDED : ஜூலை 09, 2026 09:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 10:08 PM ADDED : ஜூலை 09, 2026 09:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூலை 10

கோயில்

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* கோயில் உற்ஸவம்: பாதாள மாரியம்மன், முனியாண்டி சுவாமி கோயில்கள், மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, சக்தி கரகம், பால்குடம், வேல்குத்துதல், காலை 6:00 மணி, அம்மன், சுவாமிக்கு பாலாபிஷேகம், தீபாராதனை, காலை 10:00 மணி, பொங்கல் வைத்தல், இரவு 11:55 மணிக்கு மேல்.

* ஆடித்திருவிழா - கொடியேற்றம்: முத்துமாரியம்மன் கோயில், ஊருணிக்கரை, அனுப்பானடி, மதுரை, காலை 9:00 மணி, கும்மி கொட்டுதல், இரவு 7:00 மணி.

* ஆனி பிரம்மோற்ஸவம்: ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், மீனாட்சிபுரம் 2வது தெரு, மதுரை, திருப்பால்லாக்கில் வெண்ணைய் தாழி கிருஷ்ணன் அலங்கார சேவை, காலை 8:00 மணி, தங்க குதிரையில் வீதியுலா, இரவு 7:00 மணி, திருத்தேர் சேவை, ஏற்பாடு: சவுராஷ்டிர பிராமண தர்ம பரிபாலன சபை, இரவு 9:00 மணி.

* பொங்கல் திருவிழா: கொத்தாலத்து முனியாண்டி சுவாமி கோயில், அய்யன்பாப்பாக்குடி, மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 9:00 மணி, பொங்கல் வைத்தல், மாலை 4:30 மணி.

* கோயில் ஆண்டு உற்ஸவம்: சந்தன மாரியம்மன் கோயில், சொக்கலிங்க நகர் மெயின் ரோடு, மதுரை, பால்குடம் எடுத்தல், காலை 6:00 மணி, சக்தி கரகம், அக்னிச்சட்டி எடுத்தல், மாலை 6:00 மணி, சர்வ அலங்காரத்தில் அம்மன் நகர்வலம், முளைப்பாரி ஊர்வலம், இரவு 9:00 மணி.

* கோயில் ஆண்டு உற்ஸவம்: மாரியம்மன் கோயில், ரயில்வே காலனி, மதுரை, பால்குடம், காலை 6:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.

* ஆனி கடைசி வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு புன்னகை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.

* கார்த்திகை பூஜை: சக்தி விநாயகர் கோயில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, காலை 10:00 மணி.

* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* பரத சபதம் - கம்பராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - திருச்சி கல்யாணராமன், மஹா பெரியவர் கோயில், வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல்நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* ஏகாதசியை முன்னிட்டு ராம நாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* ஏகாதசியை முன்னிட்டு ஹரே ராம மகாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 மணி முதல்.

* பகவத் கீதா - அத்தியாயம் 3: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்தல் விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: சிறை நன்னடத்தை அலுவலர் கபி பாரதி, ஏற்பாடு: வணிக நிர்வாகவியல் துறை, காலை 10:00 மணி.

பொது

* மத்திய அரசு ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் பெட்கிராட் நிறுவனத்தில் பயிற்சி முடித்த 100 கைவினை கலைஞர்களுக்கு இலவச தையல் உபகரணங்கள் வழங்குதல்: கலெக்டர் அலுவலகம், மதுரை, முன்னிலை: பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராமன், உபகரணம் வழங்குபவர்: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, ஏற்பாடு: பெட்கிராட் எம்ப்ராய்டரி தயாரிப்பு கம்பெனி, மதியம் 3:00 மணி.

* சிறப்பு சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர்: காந்தி கிராம கிராமிய பல்கலையின் காந்திய சிந்தனை மற்றும் அமைதி ஆக்கம் துறை முன்னாள் தலைவர் வில்லியம் பாஸ்கரன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.

மருத்துவம்

* உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.

கண்காட்சி

* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

* கோ-ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயற்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெங்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

* மான்சரோவர் - ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

* சேலைகள், சல்வார்கள் விற்பனை: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: ஹியூஸ் பொட்டிக், காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us