sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

இன்றைய நிகழ்ச்சி - மதுரை


ADDED : செப் 05, 2024 03:57 AM

Google News

ADDED : செப் 05, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

திரிவேணி விழா: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பகவத் கீதை பாராயணம், காலை 6:00 மணி, பெரிய புராணம் - சிறப்புத் தொடர் விரிவுரை, நிகழ்த்துபவர்: பொள்ளாச்சி தத்துவ ஞான சபை, ஆச்சாரியர் சுவாமி வேதாந்த ஆனந்த சரஸ்வதி, காலை 7:00 மணி, தலைமை: தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி, தொடக்கவுரை: ஜவஹர் அசோசியேட்ஸின் சுரேஷ், சிறப்புரை: இளம்பிறை மணிமாறன், மாலை 6:00 மணி.

குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி: மகா பெரியவா கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

சர்ச் பெருவிழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணா நகர், மதுரை, திருப்பலி - பாதிரியார் பிரவின்தாஸ், காலை 11:30 மணி, கொடைக்கானல் வட்டார அதிபர் சிலுவை மைக்கேல்ராஜ், ஞானஒளிவுபுரம் பாதிரியார் ஜோசப், மாலை 6:00 மணி.

கும்பாபிஷேகம்: பெரியபுலி அய்யனார் கோயில், அ.வல்லாளபட்டி, காலை 9:15 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடேசன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

ஆசிரியர் தின விழா: மதுரைக் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் நடனகோபால், சிறப்புரை: கடம்பவனம் ரிசார்ட் நிர்வாக இயக்குனர் சித்ரா கணபதி, மதியம் 2:00 மணி.

ஆசிரியர் தின விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்புரை: தமிழ்நாடு இறையியல் குருத்துவக் கல்லுாரி முதல்வர் மார்க்கரெட் கலைச்செல்வி, காலை 10:45 மணி

ஆசிரியர் தின விழா: மதுரை சிவகாசி நாடார் பயோனீர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, பூவந்தி, முன்னிலை: தாளாளர் சிவராம், முதல்வர் விசுமதி, காலை 11:00 மணி.

பெற்றோர் ஆசிரியர் கூட்டம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, ஏற்பாடு: தகவல் தொழில்நுட்பவியல் துறை, காலை 11:00 மணி.

இளமையின் வெற்றி - விடுதி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி: வெள்ளைச் சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ஈஸ்வரன், இரவு 8:00 மணி.

பொது

பதஞ்சலி சில்க்ஸ் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறப்புவிழா: தெற்குமாசி வீதி, மதுரை, காலை 9:30 மணி.

வ.உ.சி., பிறந்தநாள் விழா: அண்ணா பூங்கா, திருநகர், தலைமை: திருநகர் மக்கள் மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, சிறப்புரை: த.மு.எ.க.ச., பசுமலை பாரதி, காலை 8:00 மணி.

மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன் நுாலகப் பிரிவு, விர்ச்சுவல் கோர்ட் கேபின் திறப்பு, வழக்கறிஞர் தர்மராஜ் சந்தோசம் நுாலகப் பிரிவு, ஆன்லைன் பைலிங் பிரிவு திறப்பு விழா: மகளிர் வழக்கறிஞர்கள் சங்கம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை, தலைமை: தலைவி ஆனந்தவல்லி, சிறப்பு விருந்தினர்கள்: நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், வேல்முருகன், சுப்பிரமணியன், மாலை 5:00 மணி.

தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: அவ்வை அருள், சிறப்புரை: சிவகாசி தி ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லுாரி, இணைப்பேராசிரியர் பொன்னி, காலை 10:30 மணி.

தே.மு.தி.க., கொடியேற்றும் விழா: வாடிப்பட்டி மந்தை திடல், தலைமை: பேரூர் செயலாளர் பாலாஜி, கொடி ஏற்றி மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குபவர்: பொதுச் செயலாளர் பிரேமலதா, மாலை 4:00 மணி.

வ.உ.சி., பிறந்தநாள் விழா: வ.உ.சி., சிலை, சிம்மக்கல், மதுரை, தலைமை: மாநகர் ஜனதாதளம் தலைவர் ஜெயப்பிரகாசம், சிறப்புரை: தமிழக மதச்சார்பற்ற ஜனதாதளம் மாநில பொதுச் செயலாளர் செல்லபாண்டி, காலை 10:00 மணி.

காஞ்சிபுரம் வரமஹாலட்சுமி சில்க்ஸ் திறப்பு விழா: மாட்டுத்தாவணி மெயின் ரோடு, மதுரை, திறந்து வைப்பவர்: ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், காலை 11:00 மணி.






      Dinamalar
      Follow us