ADDED : மே 21, 2024 06:53 AM
வைகாசி உற்ஸவம்
பஞ்சமூர்த்திகளுடன் அம்மனும், சுவாமியும், புதுமண்டபத்தில் எழுந்தருளுதல், பக்தியுலாத்துதல், தீபாராதனை, சித்திரை வீதிகளில் உலா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.
வைகாசி பிரம்மோத்ஸவம் 6ம் நாள்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, வியூக சுந்தரராஜ பெருமாள் சன்னதியிலிருந்து பழங்காநத்தம் கோனார் மண்டபத்திற்கு திருபல்லக்கில் எழுந்துருளுதல், காலை 6:30 மணி, நந்தவனத்தில் சுவாமி எழுந்தருளுதல், காலை 7:00 மணி, கோனார் மண்டபத்தில் சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளுதல், இரவு 10:00 மணி.
ஷண்முகார்ச்சனை: முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர் கோவில், மகா அபிேஷகம், சுவாமி புறப்பாடு, மகா தீபாராதனை, மதியம் 3:00 மணி முதல்.
வைரச்சப்பரம்: காளமேகப்பெருமாள் கோயில், திருமோகூர், ஸ்ரீ தேவி பூதேவி நம்மாழ்வாருடன் திருமஞ்சனம், திருவாராதனம் கோஷ்டி சூர்ண உத்ஸவம் திருவீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.
தேரோட்டம்: திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயில், திருவாதவூர், காலை 8:15 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
சகஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, காலை10:30 மணி.
பொது
அம்புஜம் கிருஷ்ணா ஜெயந்தி இசை விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, பாட்டு - ஸத்குரு ஸங்கீத வித்யாலய மாணவியர், வயலின் - அக் ஷயா, மிருதங்கம் - ரெயோன் ஆண்டோ, கடம் - ஜீவா, கஞ்சிரா - மேஷாத், மாலை 5:30 மணி, குரலிசை - ஹரிபிரியா, வயலின் - அக் ஷயா, கஞ்சிரா - பாலாஜி, மாலை 6:00 மணி, பாட்டு - கமலக்கண்ணன், வயலின் - அக் ஷயா, மிருதங்கம் - சங்கரநாராயணன், மாலை 6:30 மணி, ஏற்பாடு:சத்குரு சங்கீத சமாஜம், சத்குரு சங்கீத வித்யாலயம்.
காந்தியடிகளின் பன்முக ஆளுமை படிப்பிடை பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்தி மியூசியம் பொருளாளர் செந்தில் குமார், வாழ்த்துரை: காந்தி மியூசியம் காப்பாட்சியர் நடராஜன், எழுத்தாளர் அழகர்சாமி, சிறப்புரை: வங்கி பணியாளர்களுக்கான பயிற்றுனர் ஷீலா, பங்கேற்பு: மதுரைக் கல்லுாரி ஆங்கிலத் துறை முதுகலை மாணவர்கள், காலை 11:00 மணி.

