ADDED : ஆக 17, 2024 02:02 AM
கோயில்
திருபவித்திர உற்ஸவம்: சுந்தரராஜ பெருமாள் கோயில், அழகர்கோவில், உற்ஸவர் புறப்பாடாகி ஆரிய வாசல் பிரகாரம் சுற்றி வந்து சுந்தரபாண்டியன் மண்டபத்திலுள்ள ஆமைதாங்கி மண்டபத்தில் எழுந்தருளல், சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.
9ம் ஆண்டு உற்ஸவம்: இருக்கன்குடி மாரியம்மன், முத்துக்கருப்பணசாமி கோயில், சொக்கலிங்க நகர், பைபாஸ் ரோடு, மதுரை, பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், காலை 6:00 மணி, முளைப்பாரி ஊர்வலம், சுவாமி நகர்வலம், இரவு 8:30 மணி.
திருபவித்திர உற்ஸவம்: ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானம், மீனாட்சிபுரம் 2வது தெரு, மதுரை, காலை, மாலை வேளைகளில் ஹோமங்கள், திவ்ய அலங்காரம், பவளவிழா மண்டபத்தில் எழுந்தருளல், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.
மகா பிரதோஷ பூஜை: ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா, யமுனா ரோடு, எல்லீஸ் நகர், மதுரை, மாலை 5:00 மணி.
மகா பிரதோஷ பூஜை, ருத்ரம், சமகம், மஹன்யாச ஜபம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பகவத் கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய தீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த் லோசனன்சாமி, மதனகோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.
ஸத்ஸங்கம், கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி
ராமையா நாடார் பள்ளிகளின் நுாற்றாண்டு விழா: ராமையா நாடார் மேல்நிலைப்பள்ளி, அத்திபட்டி, தலைமை: பள்ளிச் செயலாளர் அசோகன், நுாற்றாண்டு வளைவு திறப்பவர்: தொழிலதிபர் ரமேஷ்பாபு, மலர் வெளியிடுபவர்: மதிவாணன், பங்கேற்பு: தாளாளர் சுதந்திர சேகரன், தொழிலதிபர் ஜெயராமன், ஏற்பாடு: தலைமை ஆசிரியர் முத்தழகு, காலை 10:00 மணி.
47 வது பட்டமளிப்பு விழா: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், சிறப்பு விருந்தினர்: காந்திகிராம் பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதம், காலை 11:00 மணி.
பொது
மார்பக நல சிகிச்சை மைய துவக்க விழா: அப்போலோ மருத்துவமனை, மதுரை, பங்கேற்பு: கலெக்டர் சங்கீதா, அரசு மருத்துவக் கல்லுாரி டீன் தர்மராஜ், முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, காலை 10:45 மணி.
'மகாத்மா காந்தி தொகுப்பு நுால்கள் - தொகுதி 9' மதிப்பாய்வுரைக் கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, மதிப்பாய்வுரை வழங்குபவர்: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி.
மள்ளர் நாகரிகம் கருத்தரங்கம்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: மள்ளர் வரலாற்று ஆய்வு அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் தங்கச்சாமி, சிறப்புரை: தஞ்சை தமிழ்ப் பல்கலை துணைவேந்தர் திருவள்ளுவன், ஆந்திராவின் குப்பம் திராவிட பல்கலை முன்னாள் துணைவேந்தர் செல்லப்பா, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
கோல்கட்டா பெண் டாக்டர் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டாக்டர்களின் மனித சங்கிலி, அமைதி ஊர்வலம்: அரசு மருத்துவக் கல்லுாரி முன், மதுரை, தலைமை: சங்கத் தலைவர் டாக்டர் செந்தில், ஏற்பாடு: அரசு டாக்டர்கள் சங்கம், காலை 9:00 மணி.
திரிவேணி விழா - சிவானந்த ஜெயந்தி ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான குறள் (13, 14, 16, 17 அதிகாரம் மட்டும்) ஒப்புவித்தல் போட்டி: தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், மாலை 5:00 மணி.
சின்மய வனப்பிரஸ்த்த சன்ஸ்தன் கூட்டம்: சின்மய மீனாட்சி, டோக்நகர், மதுரை, தலைமை: ஜித்தேஷ் சைதன்யா, சிறப்பு விருந்தினர்: ஆயுர்வேத டாக்டர் பிரசன்ன குமார், காலை 10:00 மணி.
யாதுமாகி நின்றாய் சக்தி - பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், புதுநத்தம் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: மனோதத்துவ நிபுணர் ராணி சக்ரவர்த்தி, மாலை 5:00 மணி.
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதி, மீனாம்பாள்புரம், மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.
ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
கண்காட்சி
ஆடி ஷாப்பிங் திருவிழா - பிராண்டட் ஆடைகள், காலணிகள், உபகரணங்கள், பார்ட்டி ஆடைகள் விற்பனை: துவாராகா பேலஸ், பாண்டிகோயில் பின்புறம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை.
ஸ்ரீலெதர்ஸ் சுதந்திர தின சிறப்பு கண்காட்சி, விற்பனை: மடீட்சியா அரங்கம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை.
16வது யுனைட்டெட் அக்ரிடெக் 2024 - விவசாய கண்காட்சி: ஐடா ஸ்கட்டர், வேலம்மாள் மருத்துவமனை அருகில், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.