தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பாரம்பரிய நடைபயணம்

பாரம்பரிய நடைபயணம்

பாரம்பரிய நடைபயணம்


ADDED : ஆக 08, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சுற்றுலாத்துறை சார்பில் மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளை உள்ளடக்கிய பாரம்பரிய நடைபயணம் நடந்தது. கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா துவக்கி வைத்தார்.  திருமலை நாயக்கர் மகால்,  பத்துதுாண் சந்து,  விளக்குத்துாண்,  கொத்தவால் சாவடி, கோயில் தேர்கள், எழுகடல் வீதி, ராய கோபுரம், புதுமண்டபம், மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட 12 இடங்களை பார்வையிட்டனர்.

பாரம்பரிய மற்றும் வரலாற்று சின்னங்களை சுற்றுலா பயணிகள் அறியும் வகையில் தகவல் பலகைகள் மற்றும் அடையாள குறியீடுகளை  அமைக்க வேண்டும்.  அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, நடைபாதைகள், சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என  கலெக்டர் அறிவுறுத்தினார்.  மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி,  தொல்லியலாளர் வேதாசலம்,  வரலாற்றாசிரியர் சேதுராமன், தானம் அறக்கட்டளை பாரம்பரிய தன்னார்வலர் பாரதி, பாரம்பரியம் மற்றும் மேம்பாட்டிற்கான சுற்றுலா மையம் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், டிராவல் கிளப் தலைவர் கிரகாம், முஸ்தபா பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us