நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்
மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப்பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை காம் கேம்ஸ் சங்கம் சார்பில் போட்டி தேர்வுகளில் வெற்றிக்கான பாதை என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடந்தது.
தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி சுஜிதாபாலா வரவேற்றார். மாணவி சிந்து அறிமுக உரையாற்றினார். மதுரை பாண்டியாஸ் அகாடமி பயிற்சி ஆசிரியர் ஜெயபாஸ்கர் பேசினார். துறைத் தலைவர் நாகசுவாதி, உதவி பேராசிரியர்கள் மஞ்சுளா, ராஜா மணி ஒருங்கிணைத்தனர். மாணவி ஷானு நன்றி கூறினார்.

