நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிக நிர்வாகத்துறை சார்பில் வணிக நிர்வாகம் மற்றும் வணிகவியல் துறை மாணவியரின் பெற்றோருக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடந்தது.
முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். துறைத் தலைவர் சக்திவேல் வரவேற்றார்.
மாவட்ட தொழில் மைய முன்னாள் துணை இயக்குனர் சிவ அய்யணன், தொழில் முனைவோர் தேவிபாலா, ஜெயலட்சுமி பேசினர். பேராசிரியர் நிரஞ்சனி தொகுத்து வழங்கினார். பேராசிரியை மீனாட்சிதேவி நன்றி கூறினார்.

