ADDED : ஜூலை 03, 2026 09:04 PM
அ நிறம் | அளவு
மேலுார்: வெள்ளரிபட்டியில் ‘அட்மா’ திட்டத்தின் கீழ் அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் அலுவலர் ஓய்வு குணசேகரன், இயக்குனர் ஆனந்தன், மேலாண்மை அலுவலர் கவிதா, உதவி வேளாண் அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பேசினர். நெல் விவசாயத்தில் உயிர் உரங்களின் பயன்பாடு, மானியத் திட்டங்களின் விவரங்கள்,விவசாய அடையாள எண் குறித்து பயிற்சி அளித்தனர். உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் மருது, சிவரஞ்சனி ஏற்பாட்டினை செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்பநர் ராபின் நன்றி கூறினார்.
