நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வேளாண் கல்லுாரி வளாகம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்திய வேளாண் திறன் மேம்பாட்டு கழக நிதியுதவியின் கீழ் தொழில்முனைவோருக்கான 26 நாட்கள் பயிற்சி நடந்தது.
நிறைவு விழாவில் தோட்டக்கலைத் துறை இணைப் பேராசிரியர் அருளரசு வரவேற்றார். பேராசிரியர் நிர்மலா தலைமை வகித்தார். தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆனந்த், சரவணன், ஜோதிலட்சுமி முன்னிலையில் பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது.
பயிற்சியாளர்களுக்கு நர்சரிக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. பூச்சியியல் துறை பேராசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.