ADDED : மார் 24, 2024 06:06 AM

மதுரை : மதுரை லோக்சபா தேர்தல் செயல்பாடுகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இன்று முதற்கட்ட பயிற்சி நடக்கிறது.
மதுரை லோக்சபா தேர்தல் பிரிவு அதிகாரிகள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு நேற்று அளிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள பத்து சட்டசபை தொகுதிகளுக்கும், துணைத் தாசில்தார், கண்காணிப்பாளர்கள் நிலையில் உள்ள 250 அலுவலர்கள் பங்கேற்றனர். தேர்தல் பயிற்சி தொடர்பு அலுவலர் சந்திரசேகரன், கலெக்டரின் தேர்தல் நேர்முக உதவியாளர் கண்ணன் உட்பட ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இந்த அலுவலர்கள் ஓட்டுச்சாடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வது, ஓட்டுப்பதிவுக்கு பின் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்வது, அம்மையங்களில் அவற்றை பாதுகாப்பது என செயல்படுவர்.
மேலும் இவர்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மூன்று கட்டமாக நடக்கும் பயிற்சி வகுப்புகளையும் நடத்த உள்ளனர்.
பயிற்சி மையங்கள் விவரம்
பத்து சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி இன்று (மார்ச் 25 நடக்கிறது.
தொகுதி வாரியாக பயிற்சி நடைபெறும் மையங்கள் வருமாறு:
மேலுார் - மேலுார் மில்டன் மெட்ரிக் பள்ளி, மதுரை கிழக்கு- திருப்பாலை யாதவா பெண்கள் கல்லுாரி, சோழவந்தான்- வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி, மதுரை வடக்கு- மதுரை ஓ.சி.பி.எம்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரை தெற்கு- தெப்பக்குளம் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை மத்தி- மதுரை வடக்கு வெளிவீதி சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை மேற்கு- பொன்னகரம் ேஹாலிபேமிலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பரங்குன்றம்- பசுமலை மன்னர் கல்லுாரி, திருமங்கலம்- ஆலம்பட்டி அன்னை பாத்திமா கலை, அறிவியல் கல்லுாரி, உசிலம்பட்டி- உசிலம்பட்டி டி.இ.எல்.சி., பெண்கள் மேல்நி்லைப்பள்ளி ஆகிய மையங்களில் பயிற்சி நடக்க உள்ளது.

