/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீயணைப்பு கமாண்டோ வீரர்களுக்கு பயிற்சி
/
தீயணைப்பு கமாண்டோ வீரர்களுக்கு பயிற்சி
ADDED : பிப் 22, 2025 05:39 AM

மதுரை: தென்மண்டல தீயணைப்பு நிலையங்களில் இருந்து 20 கமாண்டோ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் நினைவூட்டல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு தென்மண்டல துணைஇயக்குனர் ராஜேஷ்கண்ணன் உத்தரவுபடி, வீரர்களுக்கு 5 நாள் பயிற்சியை முன்னாள் துணை ராணுவப்படை வீரர் மைக்கேல் அளித்தார்.
கள்ளந்திரி கால்வாயில் வெள்ள மீட்பு பணி, யானைமலையில் பேரிடர் மீட்பு பணி, நேற்று டி.ஆர்.ஓ., காலனியில் 14 மாடி கட்டடத்தில் இருந்து ஆட்களை கயிறு மூலம் மீட்கும் பயிற்சி அளித்தார்.
மாவட்ட தீயணைப்பு அதிகாரி வெங்கட்ரமணன், கூடுதல் அதிகாரி திருமுருகன், அனுப்பானடி நிலைய அதிகாரி கந்தசாமி, தல்லாகுளம் நிலைய அதிகாரி அசோக்குமார் உடனிருந்தனர்.