ADDED : மே 28, 2024 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை வேளாண் கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பதினெட்டாங்குடியில் விவசாய கண்காட்சி நடத்தினர். விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி அளித்தனர்.
திருந்திய நெல் சாகுபடி, பாரம்பரிய விதைகள், உயிர் உரங்கள், ஒருங்கிணைந்த பூச்சி மேலான்மை, செம்மை கரும்பு சாகுபடி முறைகளை விவரிக்கும் மாதிரிகளை அமைத்திருந்தனர். மாணவர்கள் விஷால், பவன்குமார், பார்த்தசாரதி, காவியன், நரேன் கார்த்திக், திருமலை, யோகேஸ், முகமது செக்பின், சோலேஸ் ஏற்பாடுகளை செய்தனர்.