ADDED : மே 09, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் தொழில் முனைவோருக்கான டெண்டர் வழிமுறைகள் (GeM) தொடர்பான பயிற்சி நாளை (மே 10) காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது. கட்டணம் உண்டு.
குறைந்தது பத்தாம் வகுப்பு முடித்த 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். குறு, சிறு, நடுத்தர நிறுவன உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குபவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்குwww.editn.inஐ அணுகலாம். முன்பதிவுக்கு 96771 52265 / 93424 92214. அரசு சான்றிதழ் வழங்கப்படும்.