நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி கவின்கலை மன்றம் சார்பில் மாணவர்களின் வரைதல் திறனை மேம்படுத்தும் வகையில் வரைகலை திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை நடந்தது.
செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் தொடக்க உரையாற்றினார். நிர்வாக உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நந்தினி வரவேற்றார். கல்லுாரி டீன் கவிதா பேசினார்.
முதலாமாண்டு மாணவி சங்கமித்ரா, வரைகலை நுணுக்கங்கள், வெவ்வேறு விதமான வரைதல் முறைகள் குறித்து செயல்முறை விளக்கமளித்தார். பேராசிரியர் காஞ்சனா நன்றி கூறினார்.