நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை லேடி டோக் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் முதலாமாண்டு மாணவிகளுக்கு தொல்லியல் குறித்த பயிற்சி பட்டறை நடந்தது. துறைத் தலைவர் கவிதாராணி துவக்கி வைத்தார்.
தொல்லியல் ஆய்வாளர் வேதாசலம், தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் கல்வெட்டுகள், பட்டயங்கள், நினைவுச் சின்னங்கள், நாணயங்களை காட்சிப்படுத்தி விளக்கினார்.
தொல்லியல் ஆய்வாளர் விஜய சாமுண்டீஸ்வரி, ஓலைச்சுவடிகள் தயாரிப்பு, அவற்றில் எழுதும் முறை, ஓலைச்சுவடி எழுத்துக்களை வாசிப்பது குறித்து விளக்கினார். மாணவிகள் ஆனைமலை, அரிட்டாபட்டி, கீழவளவுக்கு களப்பயணம் மேற்கொண்டனர். இணைப் பேராசிரியை கிளாரா இன்னசென்ட், உதவிப்பேராசிரியை சிவகாமி ஒருங்கிணைத்தனர்.

