/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காவிரி உரிமையில் புலிபோல் பாயாமல் பூனை போல் பதுங்குகிறார் * முதல்வர் ஸ்டாலின் மீது உதயகுமார் குற்றச்சாட்டு

ADDED : ஜூலை 13, 2024 04:18 PM
சோழவந்தான்:
போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சோழவந்தானில் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் செயலாளர்கள் காளிதாஸ், ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன் முன்னிலையில் சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் துண்டு பிரசுரம் வழங்கினார்.
அவர் கூறியதாவது: போலீஸ் நினைத்தால் குற்றங்களை தடுக்க முடியும். மதுரையில் 3 நாட்களில் 3 மூதாட்டிகள் நகைக்காக கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் பின்னணியில் யாராக இருந்தாலும் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதுணையாக இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து திருப்திபடுத்துகிறார். இதெல்லாம் போதாது என்று மக்கள் வேதனை அடைகிறார்கள்.
காவிரி பிரச்னையில் தமிழகத்தின் வாழ்வுரிமை பறிபோகிறது. கர்நாடகா காங்., அரசிடம் முதல்வர் ஸ்டாலின் வெண் சாமரத்தை வீசுகிறார். தி.மு.க., அரசு வேடிக்கை பார்க்கிறது. காவிரி மன்ற நடுவர் தீர்ப்பின் படி ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., நீரை கர்நாடகத்திலிருந்து நமக்கு வழங்க வேண்டும். தினமும் ஒரு டி.எம்.சி., நீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதை ஏற்க கர்நாடகா மறுக்கிறது. காவிரி உரிமையில் முதல்வர் ஸ்டாலின் புலிபோல் பாயாமல் பூனை போல் பதுங்குகிறார் என்றார்.