ADDED : செப் 10, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் ஒன்றிய ஓ.பி.எஸ்., அணி செயலாளர் கொடி வைரவன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
அப்போது உதயகுமார் பேசுகையில், ''அமைச்சர் உதயநிதி ஒற்றை செங்கலை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விளம்பரம் தேடினார். அறிவிக்கப்படாத முதல்வராக உள்ள உதயநிதி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்ய வேண்டும். கப்பலுார் டோல்கேட்டை அகற்றுவோம் என தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. இங்கும் உதயநிதி ஆய்வு செய்து அதை அகற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பாரா.
மதுரைக்கு ஏதாவது ஆக்கப்பூர்வமான செயலை செய்தால் அவர் பதவிக்கு அழகாக இருக்கும்'' என்றார்.

