/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கப்பலுார் டோல்கேட்டை அகற்ற கலெக்டருக்கு உதயகுமார் கடிதம்
/
கப்பலுார் டோல்கேட்டை அகற்ற கலெக்டருக்கு உதயகுமார் கடிதம்
கப்பலுார் டோல்கேட்டை அகற்ற கலெக்டருக்கு உதயகுமார் கடிதம்
கப்பலுார் டோல்கேட்டை அகற்ற கலெக்டருக்கு உதயகுமார் கடிதம்
ADDED : ஜூலை 04, 2024 01:36 AM
திருமங்கலம்: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ள கப்பலுார் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என கலெக்டர் சங்கீதாவுக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் கடிதம் அனுப்பினார்.
அதில் தெரிவித்துள்ளதாவது: உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்டு டோல்கேட் நிர்வாகம் தொடர்ந்து பிரச்னை செய்து வருகிறது. திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கட்டணம் செலுத்தகோரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 2009ல் தி.மு.க., காங்., ஆட்சியில் இங்கு டோல்கேட் அமைக்கப்பட்டது. 2021ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் இந்த டோல்கேட் அகற்றப்படும் என ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
மத்திய அரசு 60 கி.மீ., துாரத்திற்கு இடைப்பட்ட டோல்கேட்டை அகற்ற வாய்ப்பளித்தும் தி.மு.க., அரசு அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதுகுறித்து ஏற்கனவே 2022ம் ஆண்டு ஜூலையில் கப்பலுார் டோல்கேட் அருகே எனது தலைமையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தபோது கைது செய்யப்பட்டோம். எனவே கப்பலுார் டோல்கேட்டை அகற்ற அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.