/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருமங்கலம் குப்பை கிடங்கில் 'அணையா நெருப்பு'
/
திருமங்கலம் குப்பை கிடங்கில் 'அணையா நெருப்பு'
ADDED : மார் 07, 2025 06:53 AM
திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகளில் தினமும் 15 டன் குப்பை பெறப்பட்டு, மக்கும் குப்பை உரமாக தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகளில் பிளாஸ்டிக் கழிவு, ரப்பர் பொருட்கள் தனித்தனியாக பிரித்து தேவைப்படும் நிறுவனங்களுக்கு மாதம் தோறும் அனுப்பப்படுகின்றன.
சில ஆண்டுகளாக ராஜபாளையம் ரோட்டில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் சேமிக்கப்பட்ட குப்பையை அகற்ற 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் தயாரித்தும் முறையாக அகற்றப்படாமல் இருந்து வருகிறது. நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை.
குப்பையை எரிப்பதால் கரும்புகை அப்பகுதி முழுவதும் பரவுகிறது. மக்கள் நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.