/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தரிசன கட்டண முறையை குறைக்க வலியுறுத்தல்
/
தரிசன கட்டண முறையை குறைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 08, 2024 06:23 AM
மதுரை: 'கோயில்களில் தரிசன கட்டண முறையை குறைக்க வேண்டும்' என ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் சுந்தரவடிவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த ஆலயப்பிரவேசம் நிகழ்வை நினைவுகூர்ந்து அவர் கூறியதாவது: கோயில்களில் இருந்த ஜாதிய வழிபாட்டு தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற காந்தியின் வேண்டுகோளை ஏற்று ராஜாஜி, சத்திய மூர்த்தி உள்ளிட்ட தலைவர்களின் தலைமையில் ஆலயப்பிரவேசத்தை காங்கிரசார் துவக்கினர். 1939 ஜூலை 8 ல் வைத்தியநாத அய்யர், என்.எம்.ஆர்.சுப்புராமன், கக்கன் போன்றோரின் அயராத உழைப்பால் முத்துராமலிங்க தேவரின் பாதுகாப்பில் தாழ்த்தப்பட்ட மக்கள் அன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் வழிபாட்டுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவ்வாறு தொடங்கிய கோயில் வழிபாட்டு தீண்டாமை ஒழிப்பு முழு வெற்றி பெற்றது.
பின்னர் அறநிலையத் துறையால் பொருளாதார ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் கட்டண தீண்டாமை பக்தர்களுக்கிடையே வேறுபாட்டை உருவாக்கியுள்ளது. தரிசன கட்டணமுறை சமூகநீதி கோட்பாட்டிற்கும், ஹிந்து ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே தமிழக அரசு தரிசனக் கட்டண முறையை படிப்படியாக குறைத்து கோயில்களில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்றார்.