/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க வலியுறுத்தல்
/
சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க வலியுறுத்தல்
சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க வலியுறுத்தல்
சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 20, 2024 02:54 AM
பேரையூர் : பேரையூரில் சேதமடைந்த மின் கம்பங்களால் விபத்து அபாயம் இருப்பதால் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
அப்பாஸ் நகர், ஜவகர்தெரு, பைபாஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் சேதமடைந்த மின்கம்பங்கள் பல உள்ளன. இந்த கம்பங்கள் படுமோசமான நிலையில் எப்போது விழுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
மரங்களுக்கு நடுவில் மின்கம்பங்கள் உள்ளதால் பலத்த காற்றுக்கு மரங்கள்முறிந்துவிழுந்தால், கம்பங்களும் பாதிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. இடி, மின்னல் நேரங்களில் கூடுதல் ஆபத்து வாய்ப்பு உள்ளது.
ஒரே வரிசையில் உள்ள மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் ஒன்று சாய்ந்தாலும் ஒட்டு மொத்தமாக விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. விபத்து நடந்து விபரீதம் விளையும் முன்பாக சேமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.