sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

யு.பி.எஸ்., ஓய்வூதிய திட்டத்திலும் பழைய ஓய்வூதிய பலன்கள் இல்லை

/

யு.பி.எஸ்., ஓய்வூதிய திட்டத்திலும் பழைய ஓய்வூதிய பலன்கள் இல்லை

யு.பி.எஸ்., ஓய்வூதிய திட்டத்திலும் பழைய ஓய்வூதிய பலன்கள் இல்லை

யு.பி.எஸ்., ஓய்வூதிய திட்டத்திலும் பழைய ஓய்வூதிய பலன்கள் இல்லை

2


ADDED : ஆக 26, 2024 09:37 AM

Google News

ADDED : ஆக 26, 2024 09:37 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''மத்திய அரசு அறிவித்துள்ள யு.பி.எஸ்., ஓய்வூதிய திட்டத்தில் பணபலன் இருந்தாலும், பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள பலன்கள் இல்லை'' என சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார், பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறினர்.

அவர்கள் கூறியதாவது:


கடந்த ஏப். 1 க்குப் பிறகு மத்திய அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத் துறை ஊழியர்கள், சீருடைப் பணியாளர்களுக்கு யு.பி.எஸ்., என்ற ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 23 லட்சம் ஊழியர்கள் பயனடைவர் என்றும் அறிவித்தனர்.

இந்த திட்டத்திற்கும், தமிழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழக அரசு தங்கள் வாக்குறுதியில் சி.பி.எஸ்., எனும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்தது. மத்திய அரசால் சோமநாதன் கமிட்டியின் அறிக்கை வந்த பிறகு, ஆந்திராவின் உத்தரவாத ஓய்வூதிய திட்டத்தையும் ஆய்வு செய்து தமிழகத்தில் சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

மத்திய அரசு அறிவித்த யு.பி.எஸ்., திட்டத்தில் பணப்பயன் இருந்தாலும், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பயன்கள் இல்லை. இந்தியாவிலேயே அரசு துறைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், மற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், கம்யூடேசன், கருணைத் தொகை இல்லாத இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கூறியதாவது:

இந்தியா முழுவதும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்கள் நடந்தது. இதன் விளைவாக ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஹிமாச்சலப்பிரதேச மாநிலங்களில் பழைய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆயிற்று. இந்த ஆண்டுகளில் ரூ. 75 ஆயிரம் கோடி அரசு நிதியை தவறாக கையாண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

தமிழக நிதி அமைச்சர் போகும் இடமெல்லாம் ஆந்திராவில் நடத்தப்படும் திட்டத்தை பற்றியும், மத்திய அரசு அறிவித்த ஓய்வூதிய திட்டத்தை பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் அதற்கும், அமைச்சர் பேசுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. புதிய பென்ஷனும் இல்லாமல், பழைய பென்ஷனும் இல்லாமல் தமிழகம் முழித்துக் கொண்டிருக்கிறது. அனாதைகளுக்கும், விதவைகளுக்கும் உதவும் அரசு, பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 20 ஆண்டுகளாக உதவ மறுக்கிறது என்றார்.

ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன், ஆலோசகர் கண்ணன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us