/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அடிப்படை வசதிகள் இல்லாத உசிலை தற்காலிக பஸ்ஸ்டாண்ட்
/
அடிப்படை வசதிகள் இல்லாத உசிலை தற்காலிக பஸ்ஸ்டாண்ட்
அடிப்படை வசதிகள் இல்லாத உசிலை தற்காலிக பஸ்ஸ்டாண்ட்
அடிப்படை வசதிகள் இல்லாத உசிலை தற்காலிக பஸ்ஸ்டாண்ட்
ADDED : மார் 03, 2025 04:52 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்து புதுப்பிப்பதற்காக அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து 2023 ஜூலை 8 முதல் தற்காலிக பஸ்ஸ்டாண்ட் தேனி ரோடு அரசினர் குடியிருப்பு வளாகத்தில் செயல்படுகிறது.
2023 ஜூலை 17 முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் மூடப்பட்டு பணிகள் நடக்கின்றன. விரிவாக்கப்பணிக்கு சந்தை திடலுக்குள் ஒரு ஏக்கர் நிலம் தேவைப்படுவதால், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மட்டும் 2 ஆண்டுகளாக பணிகள் நடக்கிறது.
தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ள பகுதியில் உள்ள அரசினர் குடியிருப்பு கட்டடங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலானவை.
இதனால் குடியிருக்க தகுதியில்லா கட்டடங்கள் என அறிவித்துள்ளனர்.
பஸ்கள் வந்து செல்ல வளாகத்தைச் சுற்றி ரோடு அமைத்த போது குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால்களையும் மூடிவிட்டனர்.
கடந்த 3 மாதங்களாக ஏற்கனவே பழுதடைந்த கட்டடங்கள் உள்ள பகுதியை கழிப்பறை போல பயணிகள் பயன்படுத்துவதால் தேங்கிய மழைநீர் கழிவுநீராக மாறி வெளியேற வழியில்லாமல் சுகாதாரக்கேடு ஏற்படுத்துகிறது.
பஸ்கள் வந்து செல்ல அமைத்த ரோடுகள் 2 ஆண்டுகளானதால் மேடுபள்ளமாகி விட்டது. பஸ் நிறுத்தும் பகுதியில் உள்ள பள்ளத்தில் அம்மா உணவகத்தில் வெளியேறும் கழிவுநீர் தேங்குகிறது.
பயணிகளுக்கான தற்காலிக பந்தல்களில் வரிசையாக கடைகளை கட்டியுள்ளதால் பயணிகள் நிற்க இடமின்றி உள்ளது.
புதிய பஸ்ஸ்டாண்ட் பணிகளை விரைந்து முடிக்கவும், அதுவரை தற்காலிக பஸ்ஸ்டாண்டில் பயணிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.